குளச்சல், நவ. 17 –
வெள்ளிச்சந்தை அருகே அரப்புரை காலனியை சேர்ந்தவர் லிங்கவேல். லாரி டிரைவர். இவரது மனைவி ஜெயலட்சுமி (26) இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். நேற்று ஜெயலட்சுமி தனது இரு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு அப்பகுதியில் உள்ள கோவிலுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்தப் பகுதியில் உள்ள முந்திரி தொழிற்சாலை அருகே செல்லும்போது, பின்னால் வேகமாக வந்த பைக் ஒன்று தாயின் கையைப் பிடித்து சென்ற இரண்டாம் வகுப்பு படிக்கும் சிறுவன் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் பலத்த காயம் அடைந்த சிறுவனை தாய் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்டு குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.
அங்கு சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து ஜெயலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் வெள்ளிச்சந்தை போலீசார் சிறுவன் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற பைக் தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.


