தென் தாமரை குளம் ஜன 13
இஸ்ரோவின் புதிய தலைவராக தேர்வு செய்யபட்டு உள்ள விஞ்ஞானி வி. நாராயணன், தன் சொந்த மாவட்டமான கன்னியாகுமரி மாவட்டத்திற்கு நேற்று வருகை தந்தார். சாமிதோப்பு ஐய்யா வைகுண்டர் தலைமை பதியில் சாமி தரிசனம் செய்தார். தன்னுடைய நியமன ஆணையை அய்யா வழி சமய தலைவர் குரு மகா சன்னிதானம் பால பிரஜாபதி அடிகளாரை அன்புவனத்தில் சந்தித்து காண்பித்து ஆசிபெற்றார்.
நிலவில் தரை இறங்கி அங்கிருந்து மாதிரிகள் எடுத்து வர சந்திராயன் – 4 திட்டம் இஸ்ரோவின் புதிய திட்டங்களில் ஒன்று, என்றும் வின்வெளியில் இரண்டு செயற்கை கோல்களை இணைக்கும் முயற்சி நடந்து கொண்டு இருக்கிறது என விஞ்ஞாணி வி. நாராயணன் சாமிதோப்பில் செய்தியாளர்களிடம் கூறினார்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் பதவி காலம் 2 ஆண்டுகள் . தற்போது கேரளாவை சேர்ந்த சோம்நாத்தின் பதவி காலம் முடிவடைவதால் புதிய தலைவராக விஞ்ஞானி டாக்டர் வி. நாராயணன் தேர்வு செய்யபட்டு உள்ளார் இவர் 14 ஆம் தேதி பதவி ஏற்க்க உள்ளார் . இந்நிலையில் இஸ்ரோவின் புதிய தலைவராக தேர்வு செய்யபட்ட விஞ்ஞானி வி . நாராயணன் அவரது சொந்த மாவட்டமான கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை தந்து உள்ளார் . நாகர்கோவில் அருகே காட்டு விளையை சேர்ந்த அவர், சாமிதோப்பு ஐய்யா வைகுண்டர் தலைமை பதிக்கு வருகை தந்து சாமி தரிசனம் செய்தார் அவருக்கு கோவிலில் சிறப்பான வரவேற்ப்பு கொடுக்கப்பட்டது. அவர் தற்போது வலிய மலை திரவ எரிப்பொருள் ராகெட் மையத்தின் எல்.பி.எஸ். சி. இயக்குனராக பணியாற்றி வருகிறார் . ராகெட் மற்றும் விண்கல ஆயத் துறையில் 40 ஆண்டு காலம் சாதனை படைத்த விஞ்ஞானி நாராயணன் , ஜ.ஜ.டி காரக்பூரின் வெள்ளி பதக்கமும், இந்திய விண்வெளி சங்கத்தில் தங்கபதக்கமும், என்.டி.ஆர்.எப், அமைப்பின் தேசிய வடிவமைப்பு விருதுகளையும் பெற்ற சாதனையாளர் அவர்.இஸ்ரோவின் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்ட பின் தன்னுடைய சொந்த ஊரான குமரி மாவட்டத்திற்கு வருகை தந்து அய்யா வழி சமூக தலைவர் பால பிரஜாத பதி அடிகளாரிடம் ஆசி பெற்ற பின் செய்தியாளர்களை அவர் சந்தித்தார் அப்போது அவர், கூறுகையில் பிரதமர் மோடி அவர்களால் தான் இந்த பதவி எனக்கு கிடைத்தது இதற்கு இறைவனின் ஆசி குடும்பம் உற்றார் உறவினர்கள், நண்பர்கள், சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் ஆதரவுமே இதற்கு காரணம் என்றும் இது எனக்கு கிடைத்த பதவியாக நான் நினைக்க வில்லை இஸ்ரோவில் பணியாற்றிய எங்கள் குழுவிற்கு கிடைத்த பதவியாக நான் கருதுவதாகவும், இஸ்ரோ 1962 -ல் தொடங்கப்பட்டு 62 ஆண்டுகள் ஆகிறது நாட்டில் பல்வேறு துறைகளுக்கு பயன்படும் படியாக பல்வேறு ராகெட்டுகள் பயன்படுத்த பட்டு உள்ளன . தொலை தொடர்பு துறை, தொலை உணர்வு, மற்ற இடங்களை கண்டுப்பிடிப்பது, டிசாஸ்சர் எச்சரிக்கைகள். சந்திரியான் 1, 2, 3, மங்கலா யான் போன்றவை இஸ்ரோவின் சாதனைகளாலும், ஆட்களை ராகெட்டில் விண்வெளியில் அனுப்பு திருப்பி அழைத்து வருதல், நிலவில் தரையிரங்கி ஆய்வுக்கா மாதிரிகள் எடுத்து திரும்புவதற்காக சந்திராயன் .4 திட்டமும் செயல் படுத்த திட்டத்தில் உள்ளது, விண்வெளியில் Space Station அமைக்கும் திட்டமும் உள்ளது இப்படி புதிய திட்டங்கள் இஸ்ரோவில் ஏராளமாக உள்ளன.. தற்போது விண்வெளியில் இரண்டு ராகெட்டுகளை இணைக்கும் முயற்சி தொடர்ந்து நடந்து வருகிறது என்று கூறிய அவர், 1980 ஆம் ஆண்டில் 30 கிலோ கிராம் எடை கொண்ட ராகெட்டை தான் விண்வெளிக்கு அனுப்பினோம் இன்றி 1000 கிலோ கிராம் எடையுள்ள ராகெட்டை அனுப்பும் நிலைக்கு இஸ்ரோ வளர்ந்து உள்ளதாகவும், இதுவரை 55 செயற்கை கோள்கள் தாம் நாம் அனுப்பி உள்ளோம் இது போதாது நிறைய செயற்கை கோள்கள் அனுப்ப வேண்டும் என அவர் தெரிவித்தார்.



