இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் ரெகுநாதபுரம் ஊராட்சியில் வாரச்சந்தை திறப்பு விழா நடந்தது. இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் திறந்து வைத்தார். ரெகுநாதபுரம், முத்துப்பேட்டை, பெரியபட்டினம் உட்பட 50 கிராம மக்கள் இந்த வார சந்தை மூலம் பயனடைவார்கள். இராமநாதபுரம் மாவட்டம் ஊராட்சிகளின் உதவி இயக்குநர் திருப்பதி ராஜன், யூனியன் தலைவர் புல்லாணி,
பிடிஓக்கள் ராஜேஸ்வரி, கோட்டை இளங்கோவன், ரெகுநாதபுரம்
ஊராட்சி மன்ற தலைவர் கோபாலகிருஷ்ணன் திறப்பு விழா ஏற்பாடுகளை செய்து விழாவில் வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட கவுன்சிலர் ஆதித்தன், ஊராட்சி துணைத்தலைவர் ஜெகத்ரட்சகன் ஒன்றிய கவுன்சிலர்
பைரோஸ் கான்,
உள்பட பலர் பங்கேற்றனர். துணை பிடிஓ விஜயகுமார் நன்றி கூறினார்.