தருமபுரி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் மனித நேய வார நிறைவு விழா இலக்கிய ம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியிக்கு சாகுல் ஹமீது மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் வரவேற்புரையா ற்றினார். மாவட்ட ஆட்சித் தலைவர் சாந்தி தலைமையிலும், தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மணி, சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் மணி,
பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி, அருர் சட்டமன்ற உறுப்பினர் சம்பத்குமார், பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மனிதநேய வார விழாவினையொட்டி கலை நிகழ்ச்சிகள், மனித நேயத்திற்கான பேச்சுப்போட்டி மற்றும் பல போட்டிகள் நடத்தப்பட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நன்றியுரை ரமேஷ் தனி வட்டாட்சியர் ஆதிதிராவிட நலத்துறை இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை தருமபுரி மாவட்ட ஆதிதிராவிடர் நல விடுதிக்காப்பாளர்/ காப்பாளினிகள் மற்றும் அனைத்து தலைமை ஆசிரியர்கள்/ ஆசிரியர்கள் செய்து இருந்தனர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பள்ளியின் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.