தென்காசி வடக்கு மாவட்டம் மேலநீலிதநல்லூர் தெற்கு ஒன்றிம் சார்பில்
தெற்கு அச்சம்பட்டியில் வைத்து நாடு போற்றும் திமுக அரசின் நான்கு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.தெற்கு ஒன்றிய செயலாளர் பால்ராஜ் தலைமை வகித்தார். தலைமை செயற்குழு உறுப்பினர் பரமகுரு, ஒன்றிய அவைத் தலைவர் நடராஜன், ஒன்றிய பொருளாளர் சக்திவேல் சக்திவேல் ஒன்றிய துணைச் செயலாளர் மாரியப்பன் மாவட்ட பிரதிநிதிகள் மணி, விஜயன், கிளைச் செயலாளர் வீமராஜ், சௌந்தர், கதிரவன் இன்பராஜ் முன்னிலை வகித்தனர். ஒன்றிய துணைச் செயலாளர் கணேஷ் ராம்குமார் வரவேற்றார் மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் பசுபதி பாண்டியன் தொகுத்து வழங்கினார். இதில் தலைமைக் கழக பேச்சாளர் பிரவீன் கலந்து கொண்டு பேசினார். தொடர்ந்து தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ கலந்து கொண்டு திமுக அரசின் நான்காண்டுகள் சாதனைகள் குறித்து விளக்கிப் பேசினார். முடிவில் வடக்கு அச்சம்பட்டி கிளை செயலாளர் சௌந்தர் நன்றி கூறினார் கூட்டத்தில் மாவட்ட ஒன்றிய நகர கிளை வார்டு பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்



