வேலூர்=15
வேலூர் அக் 15 தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றிய பகுதிகளான அழிஞ்சிகுப்பம், ராஜாக்கல் ஊராட்சிகளில் கிளை கழகங்கள் அமைக்கப்பட்டு ,கட்சி கொடி ஏற்றி பெயர் பலகை திறப்பு விழா மற்றும் அன்னதானம் வழங்கும் விழா ஆகியவை தமிழக வெற்றிக் கழகத்தின் நிறுவனர் தளபதி விஜய் அவர்களின் ஆலோசனைக்கிணங்க மாநிலத் தலைவர் பூஸ்ஸி ஆனந்த் வழிகாட்டுதல்படி மாவட்டத் தலைவர் வேல்முருகன் மற்றும் குடியாத்தம் ஒன்றிய தலைவர் கலைச்செல்வம், துணை செயலாளர் விஸ்வநாதன், ஒன்றிய நிர்வாகிகள் கஜேந்திரன், அண்ணாமலை, ராஜேஷ் ,ராம்ராஜ், வீரமணி, குமரேசன், அஸ்கர், சந்திரகாந்த், நாகலிங்கம், தாமோதரன், சஞ்சய் ,அருண்குமார் ஆகியோர் முன்னிலையில் தமிழக வெற்றி கழக கட்சியின் மேற்கண்ட நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது. இதில் மேல் கொத்தகுப்பம் ஊராட்சி கிளை பொறுப்பாளர்கள் கஜேந்திரன், செல்வராஜ் ,நாகராஜ், மேல் கொத்தகுப்பம் புதுமனை கிளை பொறுப்பாளர்கள் விஜயகாந்த் ,பாண்டியன், வீரமணி, ராஜாக்கல் திருவள்ளுவர் நகர் கிளை பொறுப்பாளர்கள் ராஜேஷ்குமார்,சீனிவாசன் ,சரவணன், ராஜாக்கல் புதுமனை கிளை பொறுப்பாளர்கள் வெங்கடேஷ், சிவா, சுதாகர் ,ராஜாக்கல் கூத்தாண்டவர் நகர் கிளை பொறுப்பாளர்கள் பிரபாகரன், ஜாகிர்பாஷா, சதீஷ் ,ராஜாக்கல் பழையமனை கிளை பொறுப்பாளர்கள் சத்தியமூர்த்தி, சண்முகம், ராமராஜன் உள்ளிட்ட கிளை கழக நிர்வாகிகள் நிகழ்ச்சிகளில் கொண்டனர். பூபாலன் நன்றியுரை கூறினார். 2026 சட்டமன்றத் தேர்தலை சந்திக்க இருக்கும் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை ,கொடியேற்று விழா, அன்னதானம் வழங்கும் விழா ,பெயர் பலகை திறப்பு விழா, ஒன்றிய தலைவர் கலைச்செல்வம் தலைமையில் குடியாத்தம் பேரணாம்பட்டு முழுவதிலும் கட்சியின் விரிவாக்கம், மாற்று கட்சியினர் பொதுமக்கள் , கட்சியில் இணைக்கும் நிகழ்வு விரைவாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்க செய்தி என்றும் கூறினர்.