திண்டுக்கல் ரோட்டரி குயின் சிட்டி சங்கம் க்யூர் இந்தியா டிரஸ்ட் உடன் இணைந்து பாத வளைவு குறைபாடு உள்ள குழந்தைகளின் கால் குறைபாட்டினை சரி செய்யும் QUEENS CLUB FOOT DAY
எனும் திட்டத்தை மூன்று வருடமாக திண்டுக்கல் அரசு மருத்துவமனை வளாகத்தில் எலும்பியல் துறையுடன் இணைந்து செயல்படுத்திக் கொண்டு வருகிறது.
ரோட்டரி குயின் சிட்டி சங்கம் QUEENS CLUB FOOT DAY திட்டத்தின் மூன்றாம் ஆண்டு விழாவினை பயனாளிகளுடன் சேர்ந்து திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக விழா தலைவரும் ,ரோட்டரி மாவட்டத்தின் துணை ஆளுநருமான Rtn.M. செல்வக்கனி அவர்கள் கலந்து பேசியதாவது, ரோட்டரியினால் போலியோ இல்லாமல் போனது பற்றியும், ரோட்டரி சேவை பற்றியும் கூறியதோடு மட்டுமல்லாமல்,
குயின் சிட்டி சங்கம் மூன்று வருடங்களாக விடாமல் தொடர்ந்து சிறப்பாக நடத்தி வருவதைக் குறிப்பிட்டு சங்க உறுப்பினர்களை வாழ்த்தியதோடு Club Foot திட்டத்திற்காக நன்கொடையும் அளித்து சிறப்புரையாற்றினார். எலும்பியல் துறையின் தலைவர் டாக்டர். கார்த்திக் ராஜா, டாக்டர். புவனேஸ்வரி RMO, திண்டுக்கல் குயின் சிட்டி சங்க தலைவர் Rtn.கவிதா செந்தில்குமார் செயலர் Rtn. பார்க்கவி சந்தோஷ், Club Foot சேர்மன் Rtn.மல்லிகா, செயலர் Rtn.டாக்டர். ஷர்மிளா பாலகுரு, சங்க உறுப்பினர்கள் க்யூர் இந்தியா நிறுவனத்தின் உதவியாளர் கீதா இவர்களுடன் எண்ணற்ற பாத வளைவில் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர். குழந்தைகள் அனைவருக்கும் திண்டுக்கல் SKC நிறுவனத்தினர் புதிய உடை வழங்கினார்கள். மருத்துவர்கள் பாத வளைவு குறைபாட்டினை நீக்கும் சிகிச்சையினை விடாமல் தொடர்ந்து செய்து வருமாறு வலியுறுத்தினார்கள்.