தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா வை மயிலாடுதுறை மாவட்ட திமுகவினர் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கியும் ஏழை எளிய பொதுமக்களுக்கு உதவி செய்தும் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் குற்றாலம் கிழக்கு ஒன்றியம் திமுக இளைஞரணி சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் மங்கை சங்கர் ஏற்பாட்டில் நடைபெற்ற ரத்ததான முகாமை மாவட்ட செயலாளரும் பூம்புகார் எம்எல்ஏ விமான நிவேதா முருகன் துவங்கி வைத்தார். இதில் முன்னாள் எம்எல்ஏ அன்பழகன் உள்ளிட்ட கட்சியின் நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் என 200 க்கும் மேற்பட்டோர்கள் ரத்ததானம் வழங்கினர். குருதி கொடை வழங்கியவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும் மதிய உணவுகளையும் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமாமகேஸ்வரி சங்கர், குத்தாலம் ஒன்றிய குழு தலைவர் மகேந்திரன், முன்னாள் எம்எல்ஏ குத்தாலம் கல்யாணம், மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் சௌமியன் , மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் பிரபாகரன், உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.



