சங்கரன்கோவில் நகராட்சி கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி காணொளி காட்சி வாயிலாக
முதல்வர் முக ஸ்டாலின் துவக்கி வைத்தார்
எம் எல் ஏ ராஜா சேர்மன் உமா மகேஸ்வரி பங்கேற்பு
சங்கரன் கோவில் நகராட்சியில் அறிவு சார் மையம் அருகே ரூபாய் 8.70 கோடி மதிப்பீட்டில் புதிய கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணியை சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொளி காட்சி மூலம் தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே என் நேரு , அறநிலையைத் துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அதைத் தொடர்ந்து சங்கரன்கோவிலில் வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ தலைமையில் புதிய கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி, நகர செயலாளர் பிரகாஷ், மாவட்ட அவைத்தலைவர் சுப்பையா, நகராட்சி மேலாளர் (பொறுப்பு) பாலசுப்ரமணியன், நகராட்சி சுகாதார அலுவலர் வெங்கட்ராமன், உதவி பொறியாளர் ராம்மோகன்குமார், நகர துணை செயலாளர் முத்துக்குமார், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் உதயகுமார், துணை அமைப்பாளர் வீரமணி, கவுன்சிலர் விஜய்குமார், சுகாதார ஆய்வாளர்கள் கைலாசம் கருப்பசாமி மற்றும் ஜெயக்குமார்,ஜான்சன், சிவாஜி, விக்னேஷ், மாரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.