கன்னியாகுமரி மார்ச் 28
கன்னியாகுமரி அருகே முட்டப்பதி அய்யா வைகுண்டசாமி கோவிலில் பங்குனி திருவிழா இன்று (மார்ச் 28) காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
11 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழா ஏப்ரல் 7 வரை நடக்கிறது.
இன்று அதிகாலை 5:30 மணிக்கு கொடியேற்றம், பகல் 11:30 மணிக்கு தீர்த்தமாடல், பின்னர் உச்சிப்படிப்பு, அன்னதர்மம் ஆகியவை நடந்தன. இரவு 7:30 மணிக்கு கருட வாகன பவனி நடைபெறுகிறது.
ஏப்ரல் 2, 3 – கருட வாகன பவனி
ஏப்ரல் 4, 5 – அன்ன வாகன பவனி
ஏப்ரல் 6 – சப்பர வாகன பவனி
ஏப்ரல் 7 – பெரும் தேரோட்டம்
ஏப்ரல் 4 அன்று கலிவேட்டையாடும் விழா நடக்கிறது. திருவிழா ஏற்பாடுகளை தர்மகர்த்தாக்கள் ஆர். செல்வராஜன், எஸ். ராஜபிரபு செல்வராஜன் மேற்கொண்டு வருகின்றனர்.