கிருஷ்ணகிரி மாவட்டம் தொகரபள்ளியில் அரசு மேல்நிலைப் பள்ளியில் 1991-92 பத்தாம் வகுப்பு பயின்ற முன்னாள் மாணவ மாணவிகள் சந்திப்பு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது அதில் 1991- 92 ல் பத்தாம் வகுப்பு கல்வி பயின்ற 100க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவ மாணவிகள் குடும்பத்துடன் கலந்துகொண்டு தங்களது பள்ளிக்கால நினைவுகளை பகிர்ந்து கொண்டனர் அன்றைய காலகட்ட ஆசிரியர்கள் செங்குட்டவன், பேபிநளினி ,தெய்வனை,காவேரி, பத்மாவதி,சின்னசாமி ஆகியோர்களை மேளதாளத்துடன் தொகரபள்ளி இருந்து பள்ளிக்கு அழைத்து வந்து மாணவ மாணவிகள் ஆசிரியர்களுக்கு பாத பூஜை செய்து வரவேற்றனர் பின்னர் விழாவை துவக்கி அன்றைய காலகட்ட ஆசிரியர்கள் மற்றும் தற்போதைய தலைமை ஆசிரியர் அலெக்சாண்டர் ஆகியோர்களுக்கு கேடயம் மற்றும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது காலை 10 மணி முதல் மாலை 4.30 மணி வரை விழா நடந்தது இந்த விழாவில் முன்னாள் மாணவர்கள் ராதாகிருஷ்ணன் சுகுமார் சையத்அலாவுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் இந்தப் பகுதியில் தொகரப்பள்ளி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்வு கிராம மக்களிடையே நெகிழ்ச்சி ஏற்படுத்தியது



