தென் தாமரைகுளம், செப். 3 –
பாஜக குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் சி.எஸ். சுபாஷ் விடுத்துள்ள செய்தி குறிப்பில்: இளநிலை உதவி வரைவாளர் பணிக்காக நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி தேர்வில் அய்யா வைகுண்டர் குறித்த கேள்வியின் ஆங்கில மொழி பெயர்ப்பில் முடிசூடும் பெருமாள் என்ற அய்யா வைகுண்டரின் பெயரை “the god of hair cutting என மொழிபெயர்த்திருக்கிறார்கள்.
யாருக்கும் பதறாதே, என் மகனே நானிருக்கேன் என்று சொல்லி குரலற்ற மக்களின் குரலை ஓங்கி ஒலிக்க செய்தவர் அய்யா. சமத்துவம், சமூக நீதியை நிலைநாட்டி அதை அகிலத்திரட்டு மூலம் நாட்டு மக்களுக்கு எடுத்துரைத்தவர் அய்யா வைகுண்டர். பல கோடி மக்கள் வணங்கும் அய்யா வைகுண்டரின் மற்றொரு பெயரை இத்தனை கவனக்குறைவாகவும் பொறுப்பின்றியும் மொழிபெயர்த்திருப்பது கடுமையான கண்டனத்துக்குரியது.
நேரடியாகவோ மறைமுகமாகவோ தொடர்ந்து ஏதாவது ஒரு வகையில் இந்து மத கடவுள்களையும் நம்பிக்கைகளையும் சிதைப்பது தான் திமுக அரசின் முழு நேர வேலையாக இருந்து வருகிறது. தேர்தல் வாக்குறிதியில் சொல்லாததையும் செய்கிறோம் என்று சொல்லும் விளம்பர மாடல் அரசு அய்யா வைகுண்டர் ஆராய்ச்சி மையம் அமைப்போம் என கடந்த சட்டமன்ற தேர்தலின் போது வாக்குறுதி அளித்தது. அதை இன்று வரை செய்தார்களா? ஏன் செய்யவில்லை? தட்டி கேட்க ஆள் இல்லை.
சாமிதோப்பு தலைமைபதி குருமார்கள் பலரை போடு கருப்புகட்டி போன்றும் ஊறுகாய் போன்ற்றும் பயன்படுத்தி வருகிறது திமுக. சாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமைபதி குருமார்கள் இந்த விவகாரத்தில் வெட்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.



