மார்த்தாண்டம், அக். 6 –
மார்த்தாண்டம் அருகே பாகோடு பாட்டவிளையைச் சேர்ந்த காலம் சென்ற சுகுமாரன் மனைவி சுகுமாரி (81). இவர் இன்று காலை மேல்புறம் வங்கிக்கு சென்று பென்ஷன் பணத்தை எடுத்துக்கொண்டு ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
பாகோடு மாவறத்தலவிளை அருகே செல்லும்போது பைக் மோதியது. இதில் சுகுமாரி சம்பவ இடத்திலே பலியானார். பைக் நிறுத்தாமல் சென்று விட்டது. இவருக்கு இரண்டு மகன்கள் உண்டு.
இது குறித்து மகன் மணிகண்டன் கொடுத்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து பைக் ஓட்டி வந்த அருமனை மணலி முரம்புவிளையை சேர்ந்த பிரவின்ராஜ் மீது மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.



