குளச்சல், மே 15
திக்கனங்கோடு பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் மகன் பரத் (19). தற்போது வெள்ளிசந்தை அருகே தாயார் சுனிதா உடன் வசித்து வருகிறார். இவரது நண்பர்கள் அனீஸ் (32), பரமேஷ், சுஜன், ஸ்டாலின் மற்றும் அஜித் ஆகியோர் சேர்ந்து தனியாருக்கு சொந்தமான ஒரு தோப்பில் நேற்று முன்தினம் கோழிக்கறி சமையல் செய்து மது அருந்தி உள்ளனர்.
அப்போது திடீரென போதையில் தகராறு ஏற்பட்டதில் ஆத்திரமடைந்த அனிஸ் வெட்டு கத்தியால் பரத்தின் விலாவில் குத்தி உள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே பரத் உயிரிழந்தார். தகவலறிந்த குளச்சல் எஸ்பி பிரவீன் கௌதம் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று பார்வையிட்ட போது, அங்கு இறந்து பரத்தின் உடல் மீது அனீஸ் மதுபோதையில் படுத்து கிடந்தார்.
போலீசார் உடலை கைப்பற்றி குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மது போதையில் கிடந்த அனிசை போலீஸ் நிலையம் கொண்டு விசாரித்தனர்.
விசாரணையில் அனீஸ் போலீசாரிடம் வாக்குமூலத்தில் கூறியதாவது:-
தோப்பில் நண்பர்கள் அனைவரும் கோழிக்கறி வைத்து அளவுக்கு அதிகமாக மது குடி போதையில் இருந்துள்ளனர். அப்போது வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அனீஸ் நண்பர்களில் ஒருவரை கத்தியால் குத்த பாய்ந்து உள்ளார். ஆனால் அந்த நண்பர் விலகிக் கொள்ளவே பின்னால் நின்ற பாரத் மீது கத்தி குத்து விழுந்தது. இதில் பரத் இறந்துள்ளார். இதை பார்த்த மற்றவர்கள் அங்கிருந்து ஓடி விட்டனர்.
போதையில் இருந்த அனீஸ் ஆள் மாறி குத்தி கொன்று விட்டோமே என்று எண்ணி வருந்தி அவர் எங்கும் செல்லாமல் குற்ற உணர்ச்சியில் கொலையுண்ட நண்பனின் உடல் மேலே படுத்துக்கொண்டது விசாரணையில் தெரிய வந்தது.
இந்த நிலையில் அஜீஸ் (33) ஸ்டாலின் ( 32) ஆகியோரை பிடித்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மற்ற இருவரை தேடி வருகின்றனர். அனிஷை கைது செய்து இரணியல் கோர்ட்டில் ஆதர படுத்தி சிறையில் அடைத்தனர்.