கிருஷ்ணகிரி ஏப் 22
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பாக, சத்தியவாணி அம்மையாரின் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ், இரண்டாம் கட்டமாக, 114 பயனாளிகளுக்கு ரூ.6 இலட்சத்து 31 ஆயிரத்து 332 மதிப்பில் இலவச தையல் இயந்திரங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் .ச.தினேஷ் குமார் அவர்கள் வழங்கினார். உடன், மாவட்ட வருவாய் அலுவலர் .அ.சாதனைக்குறள், மாவட்ட சமூக நல அலுவலர் .சக்தி சுபாசினி உள்ளிட்ட பலர் உள்ளனர்.