தருமபுரி, அக்டோபர் 04 –
தருமபுரியில் மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மதசார்பின்மையை பாதுகாக்க! மநல்லினக்கத்தினை பேனி காப்போம்! தீண்டாமையை ஓழிப்போம்!
வகுப்பு வாதத்தை முறியடிப்போம் என்று இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியினர் முழக்கமிட்டனர். நிகழ்ச்சிக்கு மாவட்டச் செயலாளர் ஜெ. பிரதாபன் தலைமைத் தாங்கி மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து பிறந்த தின உரை நிகழ்த்தினார்.
நிகழ்ச்சியில் தொழிற் சங்க தலைவர் எஸ். சுந்தரம், கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர்கள் ஜி. மாதையன், சி. பாலன், பொருளாளர் அலமேலு, நிர்வாகக்குழு உறுப்பினர்கள் பி. இரவி, ஜி. பச்சாகவுண்டர், ஜி. ராஜகோபால், மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஆர். பெருமாள், கே. லட்சுமணன், ஜி. சம்பத், ஆர். ரங்கநாதன், தி. தங்கராஜ், பி. பெருமாள், முருகன், ஆர். மல்லையன் ஆகியோர் கலந்து கொண்டனர்.



