நாகர்கோவில் ஏப் 19
குமரி மாவட்டம் நாகர்கோவில் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலையில் உள்ள பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி ரவுண்டானா நண்பர்கள் இணைந்து நான்காம் ஆண்டு புனித வெள்ளி தவக்கால கஞ்சி வழங்கினர்.
கிறிஸ்தவர்கள் அனுசரிக்கும் முக்கிய நிகழ்வானபுனித வெள்ளியை முன்னிட்டு கன்னியாகுமரியில் மாவட்டத்தில் உள்ள பேராலயங்களில் நேற்று காலை முதல் சிறப்புப் பிரார்த்தனையும், சிலுவைப்பாதை நிகழ்வும் நடைபெற்றது.
புனித வெள்ளி (Good Friday) என்பது இயேசு கிறிஸ்து அனுபவித்த துன்பங்களையும் சிலுவைச் சாவையும் நினைவுகூர்ந்து ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடுகின்ற ஒரு விழா ஆகும். இந்நாள் இயேசு உயிர்பெற்றெழுந்த ஞாயிறு கொண்டாட்டத்திற்கு முந்தைய வெள்ளிக்கிழமை நிகழும் நிகழ்ச்சியாகும். இவ்விழா பெரிய வெள்ளி அல்லது ஆண்டவருடைய திருப்பாடுகளின் வெள்ளி என்றும் அழைக்கப்படுகிறது. இயேசு கல்வாரி மலையில் சிலுவையில் அறையப்பட்டதை நினைவுகூர்கின்ற இவ்விழாவின்போது கிறித்தவக் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். அதனைத் தொடர்ந்து தேவாலயங்களில் சபை விசுவாசிகளுக்கும் பொதுமக்களுக்கும் தவக்கால கஞ்சி வழங்கப்படும். தேவாலயங்களில் மட்டுமல்ல பொது இடங்களிலும் கிறிஸ்தவ இளைஞர்களால் தவக்கால கஞ்சி வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில்
குமரி மாவட்டம் நாகர்கோவில் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி ரவுண்டானா பகுதியில் கிறிஸ்தவர்களின் தவக்கால இறுதி வெள்ளியான புனித வெள்ளி அன்று வர்த்தக நிறுவனங்கள் நடத்தி வரும் உரிமையாளர்கள் தொழிலாளர்கள், சிறு குறு கடைகள் நடத்தி வருபவர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் அப்பகுதியில் உள்ள உள்ளூர் மற்றும் வெளியூரில் பணி செய்யும் நண்பர்கள் ஆகியோர் இணைந்து புனித வெள்ளியான நேற்று தவக்கால கஞ்சி காய்த்து அப்பகுதியில் உள்ளவர்களுக்கும் வெளியூரில் இருந்து வருகிறவர்களுக்கும் வழங்கினர்.
இதில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் வாகனங்களில் செல்வோர் போன்றவர்கள் அவ்விடத்தில் அமர்ந்து தவக்கால கஞ்சி வாங்கி அருந்தியும், தங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு அருகில் உள்ளவர்களுக்கும் பாத்திரங்கள் கொண்டு வந்து வாங்கியும் சென்றனர்.
பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி ரவுண்டானா இளைஞர்கள் ஒன்று சேர்ந்து புனித வெள்ளி அன்று தவக்கால கஞ்சி வழங்கிய நிகழ்வு அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.