நாகர்கோவில் மே 28
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ரயில்வே நிலையத்திற்கு ரயில் மூலம் வடமாநிலங்களில் இருந்து கோதுமை உள்ளிட்ட பல்வேறு உணவு தானியங்கள் கொண்டுவரப்படுகின்றன. நாகர்கோவில் ரயில்வே நிலையத்தில் இருந்து லாரிகள் மூலம் ரேஷன் அரிசிகள் ஏற்றி ரேஷன் கடைகளுக்கு கொண்டு செல்லப்படுவது வழக்கம். ஆனால் நேற்று பஞ்சாபில் இருந்து ரயிலில் கொண்டுவரப்பட்ட 2500 கோதுமை மூட்டைகளை நாகர்கோவில் ரயில் நிலையத்திலிருந்து லாரி மூலம் பணகுடியில் உள்ள தனியார் மாவு மில்லுக்கு கொண்டு செல்வதற்காக நாகர்கோவில் அருகே ஆசிரமம் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது புதிதாக போடப்பட்ட தரம் குறைந்த சாலை மழையில் சேதமடைந்து குண்டும் குழியுமாக காணப்பட்டதால் இந்த குண்டு குழியில் லாரி சிக்கி கவிழ்ந்ததில் அதில் இருந்த மூட்டைகள் அனைத்தும் ரோட்டில் சிதறியது. அதிர்ஷ்டவசமாக டிரைவர் உயிர் தப்பினார் இது குறித்து கோட்டார் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.



