தருமபுரி மாவட்ட உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் நுகர்வோர் தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நுகர்வோராகிய நாம் நுகர்வியல் கல்வியை அறிவதோடு நுகர்வோருக்குரிய உரிமைகளை நிறுத்த பாடுபடுவோம். நாம் தரமான பாதுகாப்பான பொருட்களையே வாங்குவோம். நாம் வாங்கும் அனைத்து பொருட்களுக்கும் பில் பெறுவோம். தேவைக்கேற்ற நுகர்வினை மேற்கொள்வோம். உள்ளிட்ட வாசகங்களை வாசித்து உறுதி மொழியினை ஏற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் உதவி ஆணையர் நர்மதா, மாவட்ட வழங்கள் அலுவலர் செம்மலை, செய்தி தொடர்பு அலுவலர் லோகநாதன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



