திருப்பூர், ஆகஸ்ட் 15 –
திருப்பூர் கோவில் வழி அருகே உள்ள ஜெயலட்சுமி நகர் மாநகராட்சி 60-வது வார்டில் 79-வது சுதந்திர தின விழாவினை முன்னிட்டு பாலாஜி நகர் குறுக்கு வீதிகள் ஜெயலட்சுமி நகர் குறுக்கு வீதிகளுக்கு அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான புதிய தார் சாலை அமைக்கும் பணி பூமி பூஜை துவக்க விழாவினை திருப்பூர் மாநகராட்சி வரி விதிப்புக்குழு தலைவரும் மாமன்ற உறுப்பினருமான திருமதி கோமதி குமார், முத்தனம் பாளையம் திமுக பகுதி செயலாளர் குமார் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
இந்த விழாவில் வட்டக் கழக செயலாளர் சிவசாமி மற்றும் ஊர் பொதுமக்கள் பெருந்திரளாக பங்கேற்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் மாமன்ற உறுப்பினர் திருமதி கோமதி குமார் சுதந்திர தினத்தை முன்னிட்டு கொடியேற்றி குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கி சிறப்பித்தார்.



