தருமபுரி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களின் அடிப்படைத் தேவைகள் நிறைவேற்ற கோரி அனைத்திந்திய மாணவர், இளைஞர் பெருமன்றத்தின் சார்பில் தருமபுரி அரசு கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அமைப்பின் மாவட்ட செயலாளர் நவீன் குமார் தலைமை தாங்கினார். பொறுப்பாளர் தமிழழுதன் மற்றும் மாணவர் பெருமன்ற நிர்வாகிகள் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.
கல்லூரியின் வேலை நேரத்தை குறைத்திடு காலை 10.00 மணி முதல் இருந்து மாலை 4.20 மணி வரை என்பதை காலை 10.00 மணி முதல் மதியம் 2.30 மணி வரை மாற்றி அமைத்திடுக. முதுகலை மருத்துவப் படிப்பை மாநில ஒதுக்கீட்டை உறுதிப்படுத்த வேண்டும்.
துணைவேந்தர் நியாமனத்தில் மாநில அரசின் அதிகாரத்தை பறிக்கும் யூஜிசி அறிவிப்பை திரும்பபெறவேண்டும்.
கல்லூரியில் பணியாற்றும் கௌரவ விரிவுரையாளர்களுக்கு மாத சம்பளம் ரூ. 50,000 ஆக உயர்த்தி வழங்கவேண்டும்.
பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலை அறிவியல் கல்லூரியில் சோசியாலஜி பிரிவில் காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்.மற்ற அரசு கல்லூரிகளில் உள்ள காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்.கல்லூரியில் உள்ள அனைத்து துறைகளிலும் நிரந்தரமான குடிநீர் வசதி செய்ய வேண்டும்.
பழுதடைந்து காணப்படும் குடிநீர் சுத்திகரிப்பான்களை உடனடியாக சரி செய்ய வேண்டும்.
கல்லூரியில் பெண்கள் கழிவறையை தினமும் துய்மை படுத்தி பெண்கள் கழிவறையில் நேப்கின் அகற்றும் இயந்திரம் வைக்கவேண்டும்.
கல்லூரியில் மாணவர்களுக்கான கழிவறை வசதியை செய்யவேண்டும்.
கல்லூரி வகுப்பறையில் பழுதடைந்து காணப்படும் மின்விளக்கு, மின்விசிறி சரி செய்ய வேண்டும். கல்லூரியில் பழுதடைந்து காணப்படும் வகுப்பறைகளை விரைந்து சரி செய்யவேண்டும். கல்லூரியில் உறங்கிக் கொண்டிருக்கும் விளையாட்டு பொருட்களை மாணவர் பயன்பாட்டிற்கு வழங்கவேண்டும்.
கல்லூரியில் மாணவர்களை தீய சொற்களால் திட்டும் ஆசிரியர்கள் மீது கடின நடவடிக்கை எடுக்கவேண்டும்.
கல்லூரியில் வகுப்பறை பற்றாக்குறையை தீர்க்க புதிய வகுப்பறைகளை கட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும்.தருமபுரி அரசு மாணவ, மாணவியர் கலைக்கல்லூரி விடுதிகளில் கொசு தொல்லையை கட்டுப்படுத்த கல்லூரி வளாகம் முழுவதும் தூய்மைப்படுத்தி செடிகொடுகளை அகற்றி, ஜன்னல், கதவுகளுக்கு கொசு வலை அமைக்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 100 – க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.