தஞ்சாவூர். ஜன.2.
தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள
கடையக்குடி கிராமத்திற்குசென்று வரும் வகையில் புதிய பஸ் போக்குவரத்து தொடங்கியது.
திருவரம்பூரில் இருந்து 87 டி என்ற பேருந்து திருக்காட்டுப் பள்ளிக்கு வந்து செல்கிறது .அந்த பேருந்து கடையக்குடி மற்றும் புத்தாம்பூர் ஆகிய கிராமங்களுக்கு சென்று பள்ளி கல்லூரி செல்லும் மாணவ மாணவியர்களுக்கும் வேலைக்கு செல்பவர்களுக்கும் பொதுமக்களுக்கும் பயன் பெறும் வகையில் வருவதற்காக பொது மக்கள் கோரிக்கை விடுத்திருந் தனர்.
இதையடுத்து தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம், எம்பி முரசொலி, எம்எல்ஏ துரை சந்திரசேகரன், ஒன்றிய குழு தலைவர் செல்லக்கண்ணு ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
இதைத் தொடர்ந்து பொதுமக்கள் வேண்டுகோளுக்கிணங்க தினமும் திருவெறும்பூரில் இருந்து காலை மற்றும் மாலை இந்த வழித்தடத் தில் பஸ் இயக்கப்படும் என்று தெரிவித்தனர்.



