கம்பம்
தேனி மாவட்டம் கம்பம் முகைதீன் ஆண்டவர் புறம் பகுதியைச் சேர்ந்த ஜெஸ்லின் பாத்திமா +2பொது தேர்வில் 591 தேனி மாவட்ட அளவில் முதல் மதிப்பெண் பெற்று சாதனை படைத்தார்.இவரைப் பாராட்டும் விதத்தில் கம்பம் திமுக 11 வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் கம்பம் சாதிக் நேரில் சென்று பொன்னாடை போர்த்தி நினைவு பரிசு வழங்கினார். மாணவியின் தாய் மாமா சாகுல் ஹமீது உடன் இருந்தார். தேனி மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த மாணவி பாத்திமாவிற்கு சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் சமூக வலைதளங்களில் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.



