கருங்கல், டிச- 17
நாகர்கோவிலில் இருந்து கருங்கல் நோக்கி நேற்று மாலையில் கார் வந்து சென்று கொண்டிருந்தது. அப்போது கருங்கல், மத்திகோடு பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே வைத்து கார் நிலை தடுமாறி அந்த பகுதியில டீக்கடையில் அருகே சாலையோரம் நின்ற ஒருவர் பைக்கில் மோதியது.
அதில் அந்த நபர் தூக்கி வீசப்பட்டார் அதோடு கார் அடுத்தடுத்த மூன்று பைக்குகள் மீது மோதி நின்றது. இது குறித்து கருங்கல் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயம் அடைந்த நபரை மீட்டு நாகர்கோவில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு சேர்த்தனர்.
பின்னர் காரில் இருந்த பெண்ணை மீட்டு அவரிடம் விசாரித்த போது, அவர் பாலூர் பகுதி சேர்ந்த கிறிஸ்டல் ஜெபா (38) என்பது தெரிய வந்தது. பைக்குகள் மீது மோதி கார் குட்டி கரணம் அடித்தும் அவருக்கு பாதிப்பு ஏற்படவில்லை. தொடர் விசாரணையில் நாகர்கோவில் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மாமியாரை பார்த்து விட்டு திரும்ப வரும்போது தூக்க கலக்கத்தில் காரை ஓட்டி வந்ததாக தெரிவித்துள்ளார்.



