ஈரோடு ஆக 24
ஈரோடு சுண்ணாம்பு ஓடை பகுதியில் ஈரோடு மாநகராட்சி, ஒளிரும் ஈரோடு மற்றும் பொதுமக்கள் இணைந்து மாநகராட்சியில் உள்ள அனைத்து ஓடைகளையும் ஒரே நேரத்தில் தூர்வாரி மாநகராட்சி பகுதிக்குள் மழை காலங்களில் சீராக தண்ணீர் செல்லும் வகையில், புனரமைப்பு பணிகளை அமைச்சர் முத்துச்சாமி துவக்கி வைத்தார்.
இதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது
ஈரோடு மாநகராட்சியின் பரப்பளவு 109.52 ச.கி.மீ. மாநகராட்சி எல்லையில் இருந்து காவேரி ஆற்றில் கலக்கும் வகையில் மாநகராட்சி பகுதியில் 8 ஓடைகள் உள்ளது. மழைக்காலத்தினை கருத்தில் கொண்டு துவங்கி வைக்கப்பட்டுள்ள இந்த பணி 29.38 கி.மீ நீளமுள்ள 8 ஓடைகளை தனியார் பங்களிப்புடன் ஒரே கால நேரத்தில் சுத்தம் செய்ய உத்தேசிக்கப்பட்டு, ஈரோடு மாநகராட்சியின் வழிகாட்டுதலில், ஒளிரும் ஈரோடு, தொழில் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் பங்களிப்புடன் ஓடைகள் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறதுமேலும் இந்த தூர்வாரும் பணிகள் நிறைவடையும் பொழுது ஓடைகள் அனைத்தும் தூய்மையாக இருக்கும். மேலும் மழை காலங்களில் தண்ணீர் தேங்காமல், வெளியேறுவதற்கும், தூய்மையான தண்ணீர் வருவதற்கும் ஏதுவாக அமையும். எனவே, மாநகராட்சி முழுவதும் சுத்தம் செய்கின்ற அளவிற்கு இப்பணிகள் நடைபெறுகிறது. மாநகராட்சி சார்பாக மொத்தமாக இருந்த 947.6 கி.மீ நீளத்தில் உள்ள கால்வாய்கள் ஒழுங்குபடுத்தப்பட்டு ஏறத்தாழ 762 கால்வாய்களுக்கு இருபுறமும் சுவர் அமைத்து, தூய்மைப் படுத்தப்பட்டுள்ளது. மற்ற பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எனவே இந்த கழிவுநீர் முழுமையாக வெளியேறுவதற்கான வாய்ப்பு உள்ளது. அந்த ஏற்பாடும் தற்பொழுது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பேபி வாய்க்கால் காலிங்கராயன் வாய்க்காலுக்கு பாதுகாப்பாக அமைந்துள்ளது. எனவே பொதுப்பணித்துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டு, இந்த வாய்க்காலினை சுத்தம் செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சாயக்கழிவு மற்றும் தோல் கழிவுகளை நேரடியாக திறந்து விடுவதை தவிர்க்க வேண்டும். பொதுமக்களுக்கும், நிலத்தடி தண்ணீருக்கும் பிரச்சினை என்றால் கடுமையாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அந்த அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே எக்காரணம் கொண்டும் சாயக்கழிவு நீரினை சுத்திகரிக்காமல் வெளியேற்றக் கூடாது அவ்வாறு செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். குப்பைகளை நீர்நிலைகளில் கொட்டக்கூடாது.
இந்நிகழ்ச்சியில்,ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம், துணை மேயர் செல்வராஜ், ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் மனிஷ் பொறியாளர்
விஜயகுமார், ஒளிரும் ஈரோடு அமைப்பு நிறுவனர் சின்னசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.