தருமபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் ஆய்வின் போது பராமரிப்பின்றி ஆங்கிரமிப்புடன் காணப்பட்ட வரலாற்றுச் சின்னமான சர் தாமஸ் மன்றோ நினைவுத்தூன் அடையாளம் காணப்பட்டு ஆக்கிரமிப்பினை அகற்றி புனரமைப்பு பணிகள் மேற்கொள்ள நகராட்சி நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார் அதனைத் தொடர்ந்து வங்கியின் ஒத்துழைப்புடன் தர்மபுரி நகராட்சி நிர்வாகத்தால் பூனரமைக்கப்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் கி சாந்தி அவர்களால் இன்று திறந்து வைக்கப்பட்டது எவ்வித ஆக்கிரமிப்பு இன்றி வரலாற்று சின்னத்தை பாதுகாத்து வரலாற்றினை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வது நம் அனைவரின் தலையான கடமையாகும் என்று தெரிவித்து நகராட்சி சார்பில் முறையாக பராமரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார் உடன் நகராட்சி ஆணையாளர் புவனேஸ்வரன் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளனர்



