கன்னியாகுமரி, செப்.18.
கன்னியாகுமரி மாவட்ட ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் செப்.13, 14 ஆகிய தேதிகளில் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற்றன. இதில் அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியின் முதலாம் ஆண்டு பி.காம். மாணவி எஸ்.எஸ். வர்ஷிகா பங்கேற்று சிறப்பான சாதனை படைத்தார்.
வர்ஷிகா 4×100 மீட்டர் தொடர் ஓட்டத்தில் முதலிடமும், 100 மீட்டர் ஓட்டம் மற்றும் நீளம் தாண்டுதலில் இரண்டாம் இடமும் பிடித்து 3 பதக்கங்களை வென்றார். இதையடுத்து கல்லூரி சார்பில் அவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக செனட் உறுப்பினரும், விவேகானந்தா கல்லூரி வணிகவியல் துறைத் தலைவருமான டாக்டர் ஆர். தர்மரஜினி மாணவி வர்ஷிகாவை பாராட்டி, பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கௌரவித்தார். மேலும், தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்று கல்லூரிக்கும் கன்னியாகுமரி மாவட்டத்திற்கும் பெருமை சேர்க்க வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டன.



