ஈரோடு, ஆக. 25:
ஈரோடு திண்டல் பகுதியைச் சேர்ந்த 88 வயது மூதாட்டி கிருஷ்ணவேணி, தனது சொத்துகளை மோசடியாக தன் பெயருக்கு மாற்றிக் கொண்ட மகன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.
மறைந்த கணவர் பொன்னுசாமிக்கும் தனக்கும் சொந்தமாக நசியனூர் பகுதியில் 2 வீடுகள் மற்றும் 25 ஏக்கர் விவசாய நிலம் இருந்ததாகவும், தன்னை பராமரிப்பதாகக் கூறி மகன் ஜெயக்குமார் மோசடியாக உயில் மற்றும் தானசெட்டில்மெண்ட் ஆவணங்களைத் தயாரித்து சொத்துகளை தனது பெயருக்கு மாற்றிக் கொண்டதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார்.
தற்போது தன்னை வீட்டை விட்டு வெளியேற்றியதுடன், பராமரிக்கவும் மறுப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்களின் பராமரிப்பு மற்றும் நலவாழ்வுச் சட்டம், 2007-ன் கீழ் மோசடியாக பெறப்பட்ட ஆவணங்களை ரத்து செய்து, சொத்துகளை மீட்டுத் தர வேண்டும் என்றும், வாழ்வாதாரத்திற்காக மாதம் ரூ.50,000 ஜீவனாம்சம் வழங்கவும், உரிய பாதுகாப்பு அளிக்கவும் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.



