தென்தாமரைகுளம், ஜூலை. 28 –
தென்தாமரைகுளம் புனித பனிமய அன்னைஆலய திருவிழா நேற்று (திங்கள்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா அடுத்த மாதம் 5ந் தேதி வரை 10 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது. முதல் நாளான நேற்று திங்கள்கிழமை மாலை 6 மணிக்கு செபமாலை, புகழ்மாலை, 6.45 மணிக்கு திருக்கொடி ஏற்றம், திருப்பலி நடைபெற்றது, இதற்கு கன்னியாகுமரி மறைவட்ட முதல்வர் அருள்பணி பெலிக்ஸ் அலெக்சாண்டர் தலைமை தாங்கினார். கன்னியாகுமரி பங்குத் தந்தை அருள்பணி மைக்கல் ஏஞ்சல் மறையுரை ஆற்றினார். இரவு 8.30 மனிக்கு இன்னிசை கச்சேரி நடைபெற்றது.
9ம் நாளான ஆகஸ்ட் 4ந் தேதி செவ்வாய்கிழமை மாலை 6 மணிக்கு செபமாலை, புகழ்மாலையும், 6:45 மணிக்கு சிறப்பு மாலை ஆராதனையும் நடைபெறுகிறது. இதற்கு கோட்டாறு மறை மாவட்டச் செயலர் அருள்பணி மரிய கிளாட்சன் தலைமை தாங்குகிறார். திருச்சி தமிழக இளையோர் பணிக்குழு இயக்குனர் அருள்பணி ஜெனிபர் எடிசன் மறையுரையாற்றுகிறார். உடன் மண்ணின் மைந்தர்கள் மற்றும் அருள் சகோதரிகள் ஜெபிக்கின்றனர். இரவு 8.30 மணிக்கு அதிசய பனிமய அன்னையின் அலங்கார தேர்பவனி நடைபெறுகிறது.
10ம் நாளான 5-ந் தேதி புதன்கிழமை காலை 7.30 மணிக்கு செபமாலை புகழ்மாலை, 8 மணிக்கு திருவிழா திருப்பலி நடைபெறுகிறது. இதற்கு சென்னை, நம் வாழ்வு முதன்மை ஆசிரியர் அருள் முனைவர். ராஜசேகரன் தலைமை தாங்குகிறார். பெங்களூர் சட்டப்பணி குழு செயலர் அருள் முனைவர் கிறிஸ்து ராஜமணி மறையுரையாற்றுகிறார். பிற்பகல் 3-மணிக்கு அதிசய பனிமய அன்னையின் அலங்கார தேர்பவனி நடைபெறுகிறது.
மாலை 6.30 மணிக்கு திருக்கொடியிறக்கம், நற்கருணை ஆசீர், இரவு 7. 30 மணிக்கு பங்கு மக்கள் வழங்கும் இன்னிசை விருந்து நடைபெறுகிறது.விழா ஏற்பாடுகளை பங்குதந்தை எல். எட்வர்ட் மற்றும் பங்குமக்கள், பங்கு அருள்பணிப் பேரவையினர். அருள்சகோதரிகள் செய்துவருகின்றனர்.



