தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாளை சமத்துவ நாளாக கொண்டாடப்பட்டு வருவதை முன்னிட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் தலைமையில் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்லோகநாதன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றனர்.



