கோவை, மே 11 –
கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் ஏர்முனை இளைஞர் அணி சார்பாக கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். மனுவில், கடந்த வாரங்களில் எதிர்பாராமல் வந்த சூறாவளி காற்று மற்றும் மழையால் கோவை மாவட்டத்தில் பல இடங்களில் வாழை தென்னை பாக்கு மற்றும் பல பயிர்கள் முறிந்தும் வேறோடு சய்ந்தும் கடும் சேதம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் உழவர்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டிருக்கிறது குறிப்பாக வாழையை நம்பி ஒன்றறை ஆண்டு செலவு செய்து காத்திருந்த உழவர்களுக்கு வாழ்வாதாரம் மிக கடுமையாக பாதித்து இருக்கிறது.
உழவர்கள் உரிய இழப்பீடு வழங்க கோரி வேளாண்துறையை அனுகிய போது அரசு வாழை ஒன்றுக்கு இழப்பீடாக 6 ரூபாய் வழங்குவதாக சொன்னார்கள். இந்த தொகை விழுந்த வாழையை அகற்றுவதற்கு கூட பத்தாது. அரசு வேளாண்துறை வாழை ஒன்றுக்கு வளர்த்து அறுவடை செய்ய 150 ரூபாய் செலவு ஆகும் என்று சொல்கிறது. ஆனால் இழப்பீடு மட்டும் 6 ரூபாய் வழங்குவது உழவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கிறது. எனவே தாங்கள் ஆய்வு செய்து உழவர்களுக்கு உரிய இழப்பீடு கிடைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் கேட்டுக்கொள்கிறோம்.
அதேபோல் நூற்றுக்கு 35 மரத்திற்கு மேல் சேதாரம் ஏற்பட்டால்தான் இழப்பீடு வழங்குவதாக சொன்னார்கள். பாக்கு, வாழை மற்றும் மரப்பயிர்கள் பல வருடமாக வருவாய் தரும் 1 மரம் 20 மரம் என்று முறிந்து விழுந்திருக்கிறது. அதிகமான இடங்களில் எனவே விழுந்த மரத்திற்கு ஏற்ப இழப்பீடு வழங்க வேண்டும் என்று கூறினர்.



