ஈரோடு, ஜூலை 13 –
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக அண்ணாமலை இருந்து வந்தார். இந்த நிலையில் அவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இதை தொடர்ந்து அவருக்கு தேசிய அளவில் பொறுப்பு நியமிக்கப்படலாம் எதிர்பார்க்கப்பட்டது ஆனால் அந்த பதவியும் அவருக்கு வழங்கப்படவில்லை.
இதனால் சிறிது காலம் அண்ணா மலை அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தார்.
இந்த நிலையில் அவர் வீ தி லீடர்ஸ் என்று அமைப்பை தொடங்கினார். இந்த இயக்கத்தில் ஏராளமானவர்கள் உறுப்பினர்களாக சேர்ந்து வருகிறார்கள். இந்த இயக்கத்தை அரசியல் இயக்கமாக மாற்ற அண்ணாமாலை முடிவு செய்துள்ளார். இதனால் முதல் மாநாடு கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நடந்தது. இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போதையில்லா இயக்கம் என்ற பெயரில் இந்த மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டில் தமிழ் நாடு முழுவதும் ஏராளமான பேர் கலந்து கொண்டனர்.
ஈரோட்டில் இருந்தும் வீ தி லீடர்ஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் அக்னி ராஜேஷ் தலைமையில் ரவிச்சந்திரன் மற்றும் ஏராளமான பேர் வாகனங்களில் பொள்ளாச்சிக்கு சென்று இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்.



