சேலம், ஜூலை 6 –
சேலம் மாவட்டம் ஏர்வாடி கிராமத்தை சேர்ந்த சந்திரசேகரன் என்பவர் அதே ஊரை சேர்ந்த இருவரிடம் ரூபாய் ஒரு இலட்சம் பணம் மாதம் ஒன்றுக்கு ரூபாய் 100க்கு 3 வட்டி வீதம் பணம் கடன் வாங்கியுள்ளார். அதனை சில மாதங்கள் கழித்து சரிவர வட்டி பணம் தரவில்லை என்று கூறி ரூபாய் 100 க்கு 8 வட்டி வீதம் மீட்டர் வட்டியாக மாற்றி கேட்டதாகவும் அதற்கு அடுத்த மாதம் நூற்றுக்கு 15 ரூபாய் என்று மீட்டர் வட்டிக்கு மாற்றி விட்டதாகவும் பணம் கொடுக்கவில்லை என்றால் உன்னை அவமானப்படுத்தி விடுவேன் என்று மிரட்டினார்.
இதனால் அவர் கேட்ட தொகையை சந்திரசேகரன் (மனுதாரர்) கட்டிக் கொண்டிருந்ததாகவும் அதன் பிறகு வீட்டிற்கு வந்து மனைவி, மகன் மற்றும் ஊர் பொதுமக்கள் முன்னிலையில் அவரை அவமரியாதையாகவும், விரும்பத் தகாத அசிங்கமான வார்த்தைகளாலும் திட்டியதால் அவரது ஆறு சக்கர வாகனத்தை வலுக்கட்டாயமாக பறிமுதல் செய்து சென்று விட்டதாகவும் அதன் பிறகு அந்த வாகனத்தை விற்று வட்டிக்கு பணம் கொடுத்தவர்களிடம் பணம் கொடுத்ததாகவும் இதுவரை தான் 6,07,000/= பணம் செலுத்தி உள்ள நிலையிலும் கொலைசெய்து விடுவதாக என்னை மிரட்டி வரும் அவர்கள் மீது கந்துவட்டி கொடுமை சட்டப்படி குற்ற நடவடிக்கை எடுக்குமாறு மல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என்று கூறி இன்று சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற திங்கட்கிழமை பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளித்தார்.



