சென்னை, ஜூன் 25 –
பெருந்தலைவர் காமராஜரின் நினைவிடத்தில் பராமரிப்பு பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதை கண்டித்து முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.
அப்போது அவர் தெரிவித்ததாவது: முன்னாள் முதலமைச்சரும் பெருந்தலைவர் காமராஜர் 124வது கொண்டாடப்பட உள்ள நிலையில் புரனைப்பு பராமரிப்பு பணிகள் நிறுத்தப்பட்டிருக்கிறது.
கடந்த திமுக ஆட்சியில் ரூ.2 கோடி 60 லட்சம் ஒதுக்கி பராமரிப்பு பணிகள் நடைபெற்ற நிலையில் சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு அனைத்து பராமரிப்பு பணிகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது கவலையளிக்கிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து காமராஜர் இல்லத்தை காண வருகை தரும் பொதுமக்கள் பூட்டியிருப்பதை கண்டு ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.
இன்னும் 20 நாட்களில் பெருந்தலைவரின் பிறந்த நாள் வரும் நிலையில் புரனைப்பு
பராமரிப்பு பணியை செய்தபாடில்லை. இன்னும் 20 நாட்களில் பெருந்தலைவரின் பிறந்த நாள் வரும் நிலையில் புனரமைப்பு பராமரிப்பு இந்த அரசு பணியை செய்தபாடில்லை.
124 ஆவது பிறந்த நாள் விழா கொண்டப்பட உள்ளது. காமராஜர் இல்லம் அரசுடமையாக்கப்பட்ட பிறகு அவரது இல்லம் பாதுகாக்கப்பட வேண்டும் என்று 2 கோடி 60 லட்சம் ரூபாய் ஒதுக்கி பராமரிப்பு செய்ய முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதியை ஒதுக்கினார்.
அரசால் இப்பணியை செய்ய முடியவில்லை என்றால் எங்களிடம் ஒப்படையுங்கள் ஜூலை 15 குள் முடித்து காட்டுகிறோம். தமிழக அரசு உடனடியாக பராமரிப்பு பணியை தொடங்கவில்லையென்றால் தமிழகம் முழுவதிலும் மக்களை ஒன்று திரட்டி பெரும் போராட்டம் நடத்துவோம் என்று தெரிவித்தார்.



