திருச்சி, மே 19 –
சமயபுரம் அருகே பணமங்கலம் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்ற மதுரை மற்றும் சிவகாசியைச் சேர்ந்த முத்துலட்சுமி (47), சந்திரா (39), சுந்தரிதேவி (30) ஆகிய மூவரை போலீசார் விசாரித்தனர்.
விசாரணையில் இவர்கள் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வாலிபர்களை சமயபுரத்திற்கு வரவழைத்து, மயக்க மருந்து கொடுத்து தங்க நகைகளை பறித்துச் சென்ற வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் என தெரியவந்தது.
இதையடுத்து மூவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து ஏழு சவரன் தங்க நகைகளை பறிமுதல் செய்து மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



