By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஈத்தாமொழி அருகே 2 தொழிலாளிகள் கொடூர கொலை: மது விருந்தின் போது ஏற்பட்ட தகராறில் பயங்கரம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ஈத்தாமொழி அருகே 2 தொழிலாளிகள் கொடூர கொலை: மது விருந்தின் போது ஏற்பட்ட தகராறில் பயங்கரம்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

ஈத்தாமொழி அருகே 2 தொழிலாளிகள் கொடூர கொலை: மது விருந்தின் போது ஏற்பட்ட தகராறில் பயங்கரம்

Last updated: June 29, 2026 6:24 pm
June 29, 2026
52 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூன் 29 –

குமரி மாவட்டம் ஈத்தாமொழி அருகே உள்ள புதூர் அடுத்த கண்ணம்பி விளை பகுதியைச் சேர்ந்தவர் சிங்கம் (60). தென்னை கதம்பை லோடு ஏற்றும் தொழிலாளி. இவருக்கு செல்வி என்ற மனைவியும் இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். பிள்ளைகள் அனைவருக்கும் திருமணம் ஆகி தனித்தனியாக வசித்து வருகிறார்கள். சிங்கத்துக்கு மது குடிக்கும் பழக்கம் உண்டு. அவ்வப்போது நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்துவது வழக்கம்.

அதே பகுதியை சேர்ந்த லிங்கசாமி (49) கொத்தனார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. நேற்று முன்தினம் இரவு சிங்கம், லிங்கசாமி மற்றும் சிலர் சேர்ந்து அந்த பகுதியில் உள்ள ஒரு காலி மனையில் அமர்ந்து மது அருந்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று காலை அவர்கள் மது அருந்திய இடத்தில் சிங்கம், லிங்கசாமி இருவரும் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தனர்.

இதில் லிங்கசாமிக்கு கல்லால் தாக்கி கழுத்து, முகம் உள்ளிட்ட இடங்களில் காயங்கள் இருந்தன. சிங்கத்தின் கழுத்து நெரிக்கப்பட்டிருந்தது. பின் தலையிலும் காயம் இருந்தது. இது குறித்து உடனடியாக ஈத்தாமொழி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து தொடர்ந்து மாவட்ட எஸ்பி (பொ) திவ்யா, கன்னியாகுமரி டிஎஸ்பி ஜெயச்சந்திரன் மற்றும் ஈர்த்தாமொழி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இரண்டு பேரும் கொலை செய்யப்பட்டு கிடந்த தகவல் கிடைத்ததும் அவர்கள் குடும்பத்தினர், உறவினர்கள், பொதுமக்கள் திரண்டனர். இதை அடுத்து அதிரடிப்படை போலீசார் அந்த பகுதியில் குவிக்கப்பட்டனர். இரண்டு பேர் கொலைக்கான காரணம் என்பது உடனடியாக தெரியவில்லை. மொத்தம் 4 பேர் சேர்ந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது. 2 பேர் கொலை செய்யப்பட்ட நிலையில், மற்ற 2 பேர் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. இதற்காக 2 தனி படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது சந்தேகத்தின் பேரில் 2 பேரை பிடித்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் கொலை நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இரண்டு பேரும் ஒரே சமயத்தில் கொலை செய்யப்பட்டிருப்பதால் யாருக்கு யார் ஆதரவாக பேசி இந்த கொலைகள் நடந்தது என்பது உறுதியாக தெரியவில்லை. கொலையாளிகள் சிக்கினால் தான் இதற்கான காரணம் தெரிய வரும் என போலீசார் கூறியுள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

சுவாமி கோவிலில் மார்கழித் திருவிழா தேரோட்டம்
இரணியல் அருகே குழந்தை பிறந்த இரண்டு மாதங்களில் இளம்பெண் தற்கொலை: ஏஎஸ்பி விசாரணை
கோவை கொடிசியாவில் புத்தகத் திருவிழா
விபத்தில் மூளைச்சாவு அடைந்த அரூர் வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்: சேலத்தில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கொண்டு செல்லப்பட்டது
காப்புக்காடு தொல்காப்பியர் சிலைக்கு கலெக்டர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சிவகங்கைமாவட்டம்

வங்கிக் கடன் இணைப்பு வழங்கும் விழா

March 10, 2025
69 Views
இந்திய அஞ்சல் துறை வழங்கும் பேக்கிங் சேவை: பயன்படுத்திக் கொள்ள அஞ்சலக கண்காணிப்பாளர் வேண்டுகோள்
பெரியமலையில் 45ஆம் ஆண்டு ஆடி கிருத்திகை திருவிழா
விளாத்திகுளம் அருகே பிள்ளையார் நத்தத்தில் பண்ணை குட்டை அமைத்தல் பணி
கட்டிடங்களுக்கு உதவும் ரெனாஃபிளக்ஸ் பிராண்ட் ஃபைபர் சிமெண்ட் போர்டுகளை அறிமுகப்படுத்தியது ரெனாகான்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account