சேலம், ஜுன் 26 –
சேலம் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவரை சார்ந்தவர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. அந்த அடிப்படையில் இன்று நடைபெற்ற முன்னாள் படை வீரர்கள் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உதவித்தொகை, பட்டா மாறுதல், நிலம் தொடர்பான கோரிக்கைகள், குடும்ப அட்டை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 25 மனுக்கள் பெறப்பட்டன.
அதேபோன்று முன்னாள் படை வீரர்கள் நலத்துறையின் சார்பில் ஒரு முன்னாள் படை வீரருக்கு போரில் காயமுற்றோருக்கான கருணைத் தொகையாக ரூ.50,000, மூன்று முன்னாள் படை வீரர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகையாக ரூ.81,000, ஒரு முன்னாள் படை வீரருக்கு திருமண நிதி உதவியாக ரூ.25,000 என மொத்தம் ரூ1, 56,000 மதிப்பிலான உதவிகள் வழங்கப்பட்டது. இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் இளம் பகவத் கூறினார்.



