நாகர்கோவில், ஜூன் 22 –
தக்கலை அருகே உள்ள 22 வயதான இளம்பெண் ஒருவர் தற்போது நாகர்கோவிலில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி நர்சிங் இறுதி ஆண்டு படித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாணவியிடம் அவரது தந்தை பாலியல் ரீதியான சீண்டலில் ஈடுபட்டார் என்ற புகார் எழுந்தது. இது தொடர்பான புகாரின் பேரில் மாணவியின் தந்தை மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த சம்பவத்துக்கு பின் அவரது தந்தை பிரிந்து சென்று விட்டார். இந்த வழக்கு நாகர்கோவில் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த நிலையில் இந்த வழக்கில் சமீபத்தில் மாணவி சாட்சியம் அளித்துள்ளார். இதனால் மானையின் மீது அவரது தந்தை ஆத்திரமடைந்தார். சம்பவ தினம் இரவு சுமார் 11 மணியளவில் மாணவி வீட்டுக்கு வந்த. தந்தை மாணவியிடம் தகராறு செய்தார். எனக்கு எதிராக நீதிமன்றத்தில் சாட்சி சொன்ன உன்னை கொல்லாமல் விடமாட்டேன் என கூறி தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். இதை அடுத்து அவர்கள் தந்தை தப்பி ஓடிவிட்டார். காயமடைந்த மாணவி தக்கலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின் பேரில் தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியின் தந்தையை கைது செய்துள்ளனர்.


