ஆம்பூர், ஜூன் 20 –
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த தேவலாபுரம் பாலாற்றங்கரையில் எழுந்தருளி அருள் பாலித்து வரும் அருள்மிகு சுயம்பு ஸ்ரீ திருப்பதி கெங்கையம்மன் கோயில் மாவட்டத்திலேயே மிகவும் பிரசித்தி பெற்ற சிரசு திருவிழா 96ம் ஆண்டு முன்னிட்டு வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட ஒரு மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
முன்னதாக கடந்த 15 நாட்களுக்கு முன்பு அம்மனுக்கு காப்பு கட்டி பக்தர்கள் விரதம் இருந்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். செவ்வாய், புதன் மற்றும் வியாழன் ஆகிய 3 நாட்களாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம அலங்காரம் நடைபெற்றது. கூழ் அமுது படைத்தல், மாவிளக்கு படைத்தல் மற்றும் ஏராளமான பெண்கள் அம்மனுக்கு பொங்கல் வைத்து படையல் செய்து வணங்கினார்கள்.
புதன்கிழமை நள்ளிரவு 12 மணிக்குமேல் புதிய ஸ்ரீ சுயம்பு திருப்பதி கெங்கை அம்மன் ஆலயத்தில் இருந்து சீர்வரிசை மேளதாளங்களுடன் மாரியம்மன் கோவிலுக்கு எடுத்துச் சென்று அங்கு சிரசு அம்மனுக்கு அலங்காரம் ஆராதனை செய்து அதிகாலை முதல் திருவீதி உலா வந்தது வியாழன் பிற்பகல் 3 மணிக்கு சுயம்பு ஸ்ரீ திருப்பதி கெங்கையம்மன் ஆலயத்திற்கு சிரசு அம்மன் வருகை தந்து ஆலயத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்கள்.
தமிழ் கலாச்சாரம் போற்றும் வகையில் அருள்மிகு சுயம்பு ஸ்ரீ திருப்பதி கெங்கை அம்மன் திருவிழாவில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், நையாண்டி மேளம், கரகாட்டம், சிலம்பு ஆட்டம் உள்ளிட்டா பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. வியாழன் இரவு திருப்பத்தூர் மாவட்டம் போற்றும் வகையில் வண்ண வண்ண வான வேடிக்கை, விண்ணை முட்டும் வெடிகள் வர்ணஜாலங்களுடன் வானவேடிக்கை மிகசிறப்பாக நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.
அருள்மிகு கெங்கை அம்மன் சிரசு திருவீதி உலா முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து வீடு வீடாக பக்தர்களுக்கு அருள்பாலித்தார்கள். வீடுகள் தோறும் அம்மனுக்கு சிறப்பு ஆராதனை வழிபாடு நடைபெற்றது. திருவிழாவை காண தேவலாபுரம், ராமச்சந்திராபுரம் , காமராஜபுரம், கம்ம கிருஷ்ணம் பள்ளி, வெங்கட சமுத்திரம், மிட்டாளம், வீராங்குப்பம், குமாரமங்கலம், கரும்பூர், கோவிந்தாபுரம், துத்திப்பட்டு, கைலாச கிரி, ஆம்பூர், குடியாத்தம், வாணியம்பாடி, வேலூர், திருப்பத்தூர், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில்
இருந்து ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து திருவிழாவை கண்டு ரசித்தனர். நிகழ்ச்சியில் ஊர் நிர்வாகத்தர் மற்றும் பொதுமக்கள் இளைஞர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.



