கிருஷ்ணகிரி, செப். 9 –
தமிழக முதலமைச்சர் ஆணைப்படி கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ச. தினேஷ்குமார் ஆலோசனையில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் குன்னத்தூர், ராமகிருஷ்ணபதி, கே.பாப்பாரப்பட்டி ஆகிய மூன்று ஊராட்சி கிராம மக்கள் பயன் பெறும் வகையில் இம்முகாம் நடைபெற்றது. இம்முகாமில் கலைஞர் உரிமைத்தொகை, முதியோர், விதவை, கணவனால் கைப்பிடப்பட்டோர் உதவித்தொகை, ஆதார் திருத்தம், புதிய பதிவுகள், ரேஷன் கார்டு திருத்தம், பிறப்பு இறப்பு சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், ஜாதி சான்றிதழ் உள்ளிட்ட தமிழக அரசின் 46 சேவைகள் குறித்து நடந்தது. இம்முகாமில் மத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்லக் கண்ணால், சாவித்திரி, ஊத்தங்கரை தாசில்தார் மோகன்தாஸ் ஆகியோர் தலைமையில் ஒன்றிய செயலாளர் குண.வசுந்தரசு முன்னிலையில் நடைபெற்றது.
இம்முகாமில் பொதுமக்களிடம் பெறப்பட்ட மனுக்களை துறை சார்ந்த அலுவலர்கள் ஆய்வு செய்து ஆதார் திருத்தம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் புதிய அட்டை வழங்குதல், மின் இணைப்பில் பெயர் மாற்றம் உள்ளிட்ட மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டு அதற்கான ஆணைகளை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்லக் கண்ணால், சாவித்திரி ஆகியோர் வழங்கினர். நிகழ்ச்சியில் துணை வட்டாட்சியர் சகாதேவன், துணை பீடிஓ உமா, குரல்வாணி, ஊராட்சி செயலாளர் சங்க மாவட்ட தலைவர் செந்தில்குமார் மற்றும் வருவாய் துறை சார்ந்த கிராம நிர்வாக அலுவலர்கள், ஊராட்சி செயலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்வில் ஏராளமான பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுக்களாக வழங்கி பயன்பெற்றனர். இறுதியில் ஊராட்சி செயலாளர்கள் தங்கராஜ், ஈஸ்வரி, ஷாலினி ஆகியோர் நன்றி தெரிவித்தனர்.



