களியக்காவிளை, ஜூன் 17 –
மார்த்தாண்டத்தில் திரயம்பகம் ஐ. ஏ. எஸ். அகாடமி கடந்த சுமார் 3 வருடங்களாக செயல்பட்டு வருகிறது. இந்த அகாடமி சார்பில் பள்ளி, கல்லூரிகளில் கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மத்திய மாநில அரசுகள் நடத்தும் போட்டி தேர்வினை எழுதுவதற்கான வழிகாட்டி மையமாக செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாணவ மாணவியரும் ஒரு அரசு வேலையில் சேர வேண்டும் என்பது இந்த நிறுவனத்தின் நோக்கம் ஆகும்.
இந்த நிலையில் அரசு வேலை வாய்ப்பு பெறுவதற்கான மாபெரும் கருத்தரங்கம் மார்த்தாண்டம் மாநகரில் தனியார் மண்டபத்தில் ஜுன் 21-ம் தேதி நடக்கிறது. இதில் திரெயம்பகம் அக்காடமியின் நிறுவன தலைவர் செந்தில் முருகன் தலைமை வகிக்கிறார். தமிழக வருவாய் துறை ஆணையர் கவிதர ராமானுஜம் பங்கேற்று கருத்தரங்கை நடத்துகிறார். காலை 10 மணிக்கு கருத்தரங்கம் துவங்குகிறது. அரசு வேலையில் சேர்வதற்கு இந்த இலவச வழிகாட்டி முகாமில் மாணவர்கள் பங்கேற்று பயன் பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.



