களியக்காவிளை, மே. 2 –
குழித்துறையில் வயிற்று வலியால் பாதிக்கப்பட்ட பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார்.
குழித்துறையை அடுத்த பழவார் பகுதியை சார்ந்தவர் அகஸ்டின். இவர் குழித்துறையில் கார் டிரைவராக பணி புரிந்து வருகிறார். இவரது மனைவி பத்மா (50). இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். பத்மா தீராத வயிற்று வலியால் பாதிக்கப்பட்டு வந்தார். ஆகவே மருத்துவமனையில் மூன்று முறை அறுவை சிகிட்சை செய்யப்பட்டது. எனினும் வயிற்று வலி தீரவில்லை.
ஆகவே சம்பவத்தன்று பத்மா மின் விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார். அவரது மகன் வந்து பார்த்த போது தாய் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்தது தெரிய வந்தது. களியக்காவிளை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடம் வந்து சடலத்தை கைப்பற்றி குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து களியக்காவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


