கிருஷ்ணகிரி,பிப்.9- கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அருகே உள்ள வேலம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி ஆண்டு விழா தலைமை ஆசிரியர் பி. பாலசுந்தரம் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் உதவி தலைமை ஆசிரியர் எஸ். முபாராக் பாஷா வரவேற்புரை ஆற்றினார். பெற்றோர் ஆசிரியர் சங்க பொறுப்பாளர்கள், ஊர் கவுண்டர்கள் மற்றும் எஸ்எம்சி உறுப்பினர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்கள் நாகோஜன அள்ளி பேரூராட்சி தலைவர் வி.சி. தம்பிதுரை, பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் பி. ஆறுமுகம், எஸ் எம் சி தலைவி எஸ். சந்தியா ஆகியோருக்கு பள்ளியின் சார்பாக பள்ளி தலைமை ஆசிரியர் பி. பாலசுந்தரம் பொன்னாடை போர்த்தி வரவேற்றார். இதைத்தொடர்ந்து பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் பள்ளியில் அதிகம் மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் பேரூராட்சி தலைவர் தம்பிதுரை, பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் ஆறுமுகம்,தலைமை ஆசிரியர் பாலசுந்தரம் ஆகியோர் வழங்கி பாராட்டினர்.விழாவில் 2000-ஆயிரத்திற்கும் க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள், பெற்றோர்கள், பொது மக்கள் கலந்து கொண்டு கலை நிகழ்ச்சியை கண்டு களித்தனர்.



