By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பவானி பகுதிகளில் வளர்ச்சி திட்டப்பணிகள் ஈரோடு மாவட்ட ஆட்சியர் கந்தசாமி ஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > பவானி பகுதிகளில் வளர்ச்சி திட்டப்பணிகள் ஈரோடு மாவட்ட ஆட்சியர் கந்தசாமி ஆய்வு
ஈரோடுதமிழ்நாடு

பவானி பகுதிகளில் வளர்ச்சி திட்டப்பணிகள் ஈரோடு மாவட்ட ஆட்சியர் கந்தசாமி ஆய்வு

Last updated: May 14, 2026 5:51 pm
May 14, 2026
11 Views
Share
SHARE

ஈரோடு, மே 14 –

ஈரோடு மாவட்டம், பவானி நகராட்சி மற்றும் ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், பவானி நகராட்சிக்குட்பட்ட தேவபுரம் பகுதியில் தூய்மை இந்தியா திட்டம் 2.0 கீழ் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் கட்டுமானப் பணிகளையும், அதே பகுதிகளில் செயல்பட்டு வரும் நுண் உரமாக்கும் மையத்தில் தினசரி வீடுகளிலிருந்து சேகரிக்கப்படும் மக்கும் குப்பைகளை செயலாக்கம் செய்து நுண் உரமாக மாற்றும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பவானி ஊராட்சி ஒன்றியம், ஆண்டிக்குளம் ஊராட்சி, விநாயகர்நகர் ரூ.13.28 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள சிமெண்ட் கான்கிரீட் தளத்தினை பார்வையிட்டு சாலையின் தரம், நீளம், அகலம் மற்றும் தடிமன் குறித்தும், சாலை அமைக்க பயன்படுத்தப்பட்ட கற்களின் அளவு மற்றும் மூலப்பொருட்களின் தரம் உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து, பவானி, மைலம்பாடியில் உள்ள ஊர்ப்புற நூலகத்தில் அரசு போட்டித் தேர்வுகளுக்கான நூல்கள், பிற நூல்கள், தினசரி வருகை தரும் வாசகர்கள் மற்றும் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளின் விபரம், குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து, பவானி, மைலம்பாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ பயனாளிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறை குறித்தும், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளை பார்வையிட்டார்.

மைலம்பாடி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத்திட்டத்தின் கீழ் வெள்ளித்திருப்பூர் சாலை முதல் கல்பாவி சாலை வரையில் மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வரும் பணியினை பார்வையிட்டார். தொட்டிபாளையத்தில் உள்ள நாற்றுப்பண்ணையினை பார்வையிட்டு உற்பத்தி செய்யப்படும் நாற்று வகைகள், நாற்றுகளின் வளர்ச்சி, அவற்றின் பராமரிப்பு ஆகிய செயல்பாடுகள் ஆகியவற்றை குறித்து கேட்டறிந்தார்.

ஈரோடு மாவட்டம், பவானி ஊராட்சி ஒன்றியம், மைலம்பாடி ஊராட்சியில் ஒருங்கிணைந்த சாலைகள் உட்கட்டமைப்பு மேம்பாட்டுத்திட்டம் 2026-27 ன் கீழ் ரூ.400 இலட்சம் மதிப்பீட்டில் கண்ணடிபாளையம் மைலம்பாடி – குப்பிச்சிபாளையம் வரை சாலை ஒரு வழித்தடத்தை இடை வழித்தடமாக அகலப்பபடுத்தி உறுதிப்படுத்துதல் மற்றும் பெட்டி பாலம் திரும்பக் கட்டுதல், மழை நீர் வடிகால் கட்டுதல் மற்றும் தடுப்பு சுவர் கட்டுதல் பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் ரமேஸ் கண்ணா, பவானி, உதவிக்கோட்டப்பொறியாளர் சேகர், பவானி உதவிப்பொறியாளர் பழனிவேலு, பவானி நகராட்சி பொறியாளர் தீலிப் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் உடனிந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

கோவையில் கலைஞரின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
அந்தியூரைச் சேர்ந்த வாலிபர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு
திருச்சியில் தாக்கி கொண்ட கஞ்சா போதை இளைஞர்கள் வீடியோ
நாகர்கோவிலில் பாலியல் புகாரில் ஏட்டு சஸ்பென்ட்
பாரதிய ஜனதா என்றால் தமிழக முதல்வருக்கு பயம்: பாரதிய ஜனதா மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் நாகர்கோவிலில் பேட்டி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடுமாவட்டம்

மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா பார்வை

February 17, 2025
123 Views
சூலூரில் ராகுல் காந்தி 55 ஆவது பிறந்தநாள் விழா
மாடம்பாக்கம் ட்ரீலீவ்ஸ் பள்ளி சார்பில் தேசிய விளையாட்டு
பூண்டி நீர் பிடிப்பு பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு
மயிலாடுதுறையின் முக்கிய பாலம் மூடப்பட்ட நிலையில் தீபாவளி விற்பனை பாதிப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account