சுசீந்திரம், ஏப். 15 –
சுசீந்திரம் அருகே உள்ள கோழிக்கோட்டு பொத்தை குமாரபுரத்தை சார்ந்தவர் ஐயப்பன் (56). இவர் மர ஆசாரி வேலை செய்து வருகிறார். நல்ல குடிப்பழக்கம் உடையவர் என தெரிகிறது. இதனால் அடிக்கடி வீட்டிற்கு குடித்துவிட்டு வந்து தனது மனைவி ஜெயஜோதிடம் (36) தகராறு செய்வது வழக்கம்.
அதுபோல சம்பவத்தன்று நல்ல குடிபோதையில் வீட்டிற்கு வந்து தகராறு செய்துள்ளார். இதனால் அவரது மனைவி இவர் தூங்கிய பின்பு வீட்டிற்கு வரலாம் என வெளியே சென்று விட்டார். சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு வந்து பார்க்கும் பொழுது வீட்டின் முன்பக்க ரூமில் உள்ள மின்விசிறி ஊக்கில் தூக்கு போட்டு இறந்து கிடந்து உள்ளார்.
இது குறித்து ஐயப்பனின் மனைவி ஜெயஜோதி சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சுசிந்திரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


