கருங்கல், பிப். 20 –
கருங்கல் அருகே உள்ள சூசைபுரம் புனித அல்போன்சா கலை அறிவியல் கல்லூரியில் தாய்மொழி தின விழா கவியரங்கம் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க குமரி மாவட்ட குழு மற்றும் கல்லூரி “அனிச்சம்” தமிழ் பேரவை இணைந்து பல்லூடக அரங்கில் நடத்தியது.
இக்கவியரங்கத்திற்கு குமரி மாவட்ட த மு எ க ச துணைத் தலைவர் கவிஞர் குமரி எழிலன் தலைமை தாங்கினார். கல்லூரியின் தமிழ் துறை தலைவர் பேராசிரியர் ஏஞ்சல் மேரி ராணி அனைவரையும் வரவேற்று பேசினார். கல்லூரியின் கணிணி இயல் துறைத்தலைவர் பேராசிரியர் சணல் முன்னிலை வகித்தார். தமுஎகச மாவட்டச் செயலாளர் அருள் மனோ தொடக்கப் பாடல் பாடினார். நிகழ்ச்சியினை எழுத்தாளர் மிகைலான் தொடங்கி வைத்தார்.
ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியின் முன்னாள் முதல்வர் பேரா. எட்வர்டு தாய்மொழியின் மேன்மை குறித்து சிறப்புரையாற்றினார். இதில் கவிஞர் மற்றும் மாநில குழு உறுப்பினர் விடியல் குமரேசன், மாவட்ட இணைச் செயலாளர் சாந்தகுமார், ஓலக்கோடு ஜான், அரங்கசாமி, ஹசன், முரளிதரன், சுஜாமின், பென்னட்ராஜ், விஜயகுமார் மாணவ மாணவியர் உட்பட பலர் கவியரங்கில் பங்கேற்றனர்.



