சென்னை, ஜன. 22 –
இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் முன்னணி நிறுவனமான ஸ்வெலெக்ட் எனர்ஜி சிஸ்டம்ஸ் நிறுவனம் (BSE: 532051 I NSE: SWELECTES). (முன்னர் நியூமெரிக் பவர் சிஸ்டம்ஸ் லிமிடெட் என்று அறியப்பட்டது) தனது புதிய கார்ப்பரேட் லோகோ மற்றும் ‘உலகிற்குப் பொறுப்புடன் ஆற்றல் அளித்தல்’ என்ற பிராண்டின் முழக்க வாசகத்தை இன்று வெளியிட்டது.
மேலும், ‘நியூமர்ஜி’ என்ற புதிய தயாரிப்புகளின் தொகுப்பையும் நிறுவனம் இன்று அறிமுகப்படுத்தியது.
இது வீடுகள், சிறு அலுவலகங்கள் மற்றும் பெரிய அளவிலான வணிக மற்றும் தொழில்துறை பயன்பாடுகளுக்குத் தேவையான, நம்பகமான, 24 மணி நேரமும் கிடைக்கக்கூடிய மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட பேட்டரி எனர்ஜி ஸ்டோரேஜ் சிஸ்டம்ஸ் (BESS) மற்றும் வீடுகளுக்கான விரிவான ஆற்றல் தீர்வுகளை உள்ளடக்கியது ஆகும்.
புதிய பிராண்ட் அடையாளம் குறித்து ஸ்வெலெக்ட் எனர்ஜி சிஸ்டம்ஸ் நிறுவனரும் மற்றும் அதன் துணைத் தலைவருமான ரா. செல்லப்பன் பேசுகையில்: “நியூமெரிக்’ பிராண்டின் மூலம் நம்பகமான மின் தீர்வுகளை உருவாக்கி வழங்கியதிலிருந்து, ‘ஸ்வெலெக்ட்’ மூலம் தூய்மையான எரிசக்தியில் கவனம் செலுத்துவது வரை, எங்களின் அடிப்படை விழுமியங்களான நம்பகத்தன்மை, பொறுப்பு ஆகியவை மாறாமல் உள்ளன. வளர்ச்சியும் நிலைத்தன்மையும் கைகோர்த்து ஒருங்கிணைந்து செல்ல வேண்டும் என்ற எங்கள் நம்பிக்கையை ‘ பவரிங் தி வேர்ல்ட் ரெஸ்பான்சிபிலி (Powering the World Responsibly’ ) என்ற எமது புதிய முழக்க வாசகம் சரியாகப் பிரதிபலிக்கிறது’ என்றார்.
நியூமர்ஜி தயாரிப்புகளின் தொகுப்பை அறிமுகப்படுத்தி, ஸ்வெலெக்ட் எனர்ஜி சிஸ்டம்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர் அருள்குமார் சண்முகசுந்தரம் பேசுகையில், ‘நம்பகமான மற்றும் உறுதியான மின்சக்தியின் எதிர்காலத்திற்கு பேட்டரி எனர்ஜி ஸ்டோரேஜ் சிஸ்டம்ஸ் (BESS) மைய அம்சமாக உள்ளன, மின் நுகர்வு முறைகள் மாறுவதாலும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் பயன்பாடு அதிகரிப்பதாலும், 24 மணி நேர மின்சாரம், மின்கட்டமைப்பின் (Grid) நிலைத்தன்மை மற்றும் எரிசக்தி தன்னிச்சையை உறுதி செய்வதில் ‘ஆற்றல், சேமிப்பு’ முக்கியப் பங்கு வகிக்கும். நியூமரஜி மூலம், வீடுகள், வணிகங்கள் மற்றும் தொழில்துறை நிறுவனங்களில் இந்தத் தேவைகளை ஸ்வெலெக்ட் பூர்த்தி செய்கிறது,” என்றார்.



