மார்த்தாண்டம், ஜன. 16 –
தக்கலை அடுத்த பள்ளியாடி பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் (44). வெளிநாட்டில் வேலை பார்க்கிறார். இவரது மனைவி அனுஷா (44). இவர் கள்ளியன்காட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். திருமணத்தின் போது அனுஷா வீட்டில் இருந்து 44 பவுன் நகைகள், வீட்டு உபயோக பொருட்கள் சீதனமாக வழங்கி உள்ளனர்.
ராஜேஷுக்கு குடிப்பழக்கம் இருந்து உள்ளதாக தெரிகிறது. இதனால் அடிக்கடி கணவன் மனைவி சண்டை போட்டு வந்துள்ளனர். இதற்கிடையே கடந்த மாதம் வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு வந்த ராஜேஷிடம் பக்கத்து வீட்டு உறவினர் ஷாஜி என்பவர் தூண்டுதலின் பேரில் மனைவி அனுஷாவிடம் அதிக வரதட்சனை கேட்டு தாக்கியுள்ளார். மேலும் இரண்டு மகன்களை அடித்து வீட்டை விட்டு வெளியேற்றி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுகுறித்து மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அனுஷா புகார் செய்தர். புகாரின் பேரில் போலீசார் ராஜேஷ், ஷாஜி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


