By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: வேலூரில் உணவகத்தில் பணம் தர மறுத்து எஸ்ஐ மகன் ரகளை; உரிமையாளரை தாக்கி விளம்பர பேனரை கிழித்த சம்பவம்; சிசிடிவி காட்சிகள் வெளியீடு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > வேலூரில் உணவகத்தில் பணம் தர மறுத்து எஸ்ஐ மகன் ரகளை; உரிமையாளரை தாக்கி விளம்பர பேனரை கிழித்த சம்பவம்; சிசிடிவி காட்சிகள் வெளியீடு
குற்றம்தமிழ்நாடுவேலூர்

வேலூரில் உணவகத்தில் பணம் தர மறுத்து எஸ்ஐ மகன் ரகளை; உரிமையாளரை தாக்கி விளம்பர பேனரை கிழித்த சம்பவம்; சிசிடிவி காட்சிகள் வெளியீடு

Last updated: December 19, 2025 6:43 pm
December 19, 2025
23 Views
Share
SHARE

வேலூர், டிச. 19 –

வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா தேசிய நெடுஞ்சாலை குடியாத்தம் சாலையில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பாபு என்பவர் துரித உணவகத்தை நடத்தி வருகிறார். இந்நிலையில், 17-12-2025 அன்று இரவு வழக்கம் போல் உணவகத்தில் பொதுமக்கள் உணவு சாப்பிட்டு கொண்டிருந்தனர்.

இரவு சுமார் 10 மணியளவில் பள்ளிகொண்டா அமானி நகரைச் சேர்ந்த கார்த்திக் என்பவரின் மகன் மனோஜ் (24) தனது நண்பருடன் உணவகத்திற்கு வந்துள்ளார். அவர் முட்டையுடன் 2 நூடுல்ஸ் மற்றும் 2 சிக்கன் ரைஸ் வேண்டும் என கேட்டுள்ளார். இதையடுத்து, உணவக ஊழியர்கள் கேட்ட உணவை பார்சலாக தயார் செய்து வழங்கினர்.

ஆனால், கூடுதலாக முட்டைகளை சேர்த்து கொடுக்க வேண்டும் என மனோஜ் மற்றும் அவரது நண்பர் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் அவர்கள் கேட்டபடி உணவை மீண்டும் தயாரித்து வழங்கியுள்ளனர். அதன் பின்னர் உணவிற்கான பணத்தை உணவக உரிமையாளர் பாபு கேட்ட போது, மனோஜ் “நான் யார் என்று தெரியுமா? என் அம்மா எஸ்ஐயாக வேலை செய்கிறார். என்னிடமே நீ பணம் கேட்கிறாயா?” என தகாத வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது.

இதனால் தகராறு முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த மனோஜ் உணவக உரிமையாளர் பாபுவை சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும் கடையில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பலகையை எடுத்து அடிக்க முயன்றுள்ளார். இதனை பார்த்த கடை ஊழியர்கள் மனோஜை தடுத்து நிறுத்த முயன்றனர்.

இதுகுறித்து தகவலறிந்த பள்ளிகொண்டா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். ஆனால் போலீசார் முன்னிலையிலேயே மனோஜ் மீண்டும் உணவக உரிமையாளரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் மனோஜை காவல் நிலையத்திற்கு அழைத்து செல்ல முயன்றனர். இருப்பினும் அவர் குடிபோதையில் இருந்ததால், அவரை அங்கிருந்து அனுப்பி வைத்து, அவரது இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர்.

இதற்கிடையில், உணவகத்தில் நடந்த இந்த ரகளை சம்பவம் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக நேற்று உணவக உரிமையாளர் பாபு போலீசில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீசார் புகாரை பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உணவு வாங்கி கொண்டு பணம் தர மறுத்து, பெண் எஸ்ஐயின் மகன் குடிபோதையில் உணவகத்தில் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பள்ளிகொண்டா பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

கன்னியாகுமரி உபகாரமாதா திருத்தலத்தில் ‘பாக்கும் படியும்’ நிகழ்ச்சி
தமிழக அரசின் விருது பெற்ற சின்னத்திரை கலைஞர் பொள்ளாச்சி பாபு அவர்களுக்கு பாராட்டு விழா
கடையநல்லூரில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஐந்து தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம்
ஆரல்வாய்மொழி அருகே அரசு பஸ் பைக் மோதி வாலிபர் பலி
பன்னந்தூரில் குழந்தை திருமணம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

குமரி குளங்களில் தாமரைப்பூ வளர்க்கும் கும்பல் மீது நடவடிக்கை; பாசன துறை சார்பில் எஸ்.பி.யிடம் புகார்

December 22, 2025
29 Views
அரியலூர் மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கை
நடிகர் தாடி பாலாஜிக்கு மருத்துவ உதவியாக 1 லட்சம் வழங்கிய கலப்பை மக்கள் இயக்க தலைவர் டாக்டர் பி.டி செல்வகுமார்
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
மத்திய ஒன்றிய கழக செயல்வீரர்கள் கூட்டத்தில்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account