நாகர்கோவில், டிச. 8 –
நாகர்கோவில் மேலபுத்தேரி, ஆசாரிமார் தெருவை சேர்ந்தவர் இசக்கிமுத்து (44). தச்சு தொழிலாளி. இவரது மனைவி ஈஸ்வரி (32). கடந்த 6ம் தேதி இரவு 7.30 மணி அளவில் இசக்கி முத்து வேலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்து பார்த்தபோது, மனைவி ஈஸ்வரியை காணவில்லை. பல இடங்களில் தேடியம் அவர் தொடர்பாக எந்த தகவலும் கிடைக்கவில்லை. இது குறித்து இசக்கிமுத்து வடசேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது போன்று நாகர்கோவில் அடுத்த பறக்கை, புல்லு விளை பகுதியை சேர்ந்தவர் விவேக். கொத்தனார் வேலை பார்க்கிறார். இவரது மனைவி மினி (29). இவர்களுக்கு திருமணம் ஆகி 12 ஆண்டுகள் ஆகின்றன. இரு பிள்ளைகள் உள்ளனர். கணவன் மனைவியிடையே குடும்பத்தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவ தினம் மினி வீட்டில் இருந்து வெளியே சென்றவர் பின்னர் வீடு திரும்பி வரவில்லை. பல இடங்களில் தேடியும் அவர் குறித்து எந்த தகவலும் கிடைக்காததால் விவேக் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


